Sunday, April 22, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 08 [ 36 முதல் 40 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 08 [ 36 முதல் 40 ஹதீஸ் வரை ]



36-حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ وَيَزِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، قَالَ: «غَضًّا أَوْ رَطْبًا»

حكم الحديث : 
إسناده صحيح

36. உமர் ( ரலி ) அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில் : குர் ஆன் இறக்கியருளப் பெற்ற முறையில் செழுமையாக ஒத விரும்பினால் என்பதோடு அல்லது ( மாற்றமடையாமல் ) புத்தம் புதிதாக ஒத விரும்பினால் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (175,265) இப்னுமாஜா ( 138 ) பதிவாகி உள்ளது.

37-حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، وَسَعِيدُ بْنُ سَلَمَةَ بْنِ أَبِي الْحُسَامِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَبِي الْحُوَيْرِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ [ص: 212] ، أَنَّ عُثْمَانَ قَالَ: تَمَنَّيْتُ أَنْ أَكُونَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاذَا يُنْجِينَا مِمَّا يُلْقِي الشَّيْطَانُ فِي أَنْفُسِنَا؟ فَقَالَ أَبُو بَكْرٍ قَدْ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «يُنْجِيكُمْ مِنْ ذَلِكَ أَنْ تَقُولُوا مَا أَمَرْتُ بِهِ عَمِّي أَنْ يَقُولَهُ فلمْ يَقُلْهُ»

حكم الحديث : صحيع لغيره وهدا إسناد ضعيف لانقطاعه

37. உஸ்மான் பின் அஃப்பான் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் ,” ஷைத்தான் நம் உள்ளங்களில் ஏற்படுத்தக் கூடிய ( ஓரிறைக் கொள்கைக்கு எதிரான மனக்குழப்பம், ஜயம் உள்ளிட்ட ) வற்றிலிருந்து நம்மை எது காப்பாற்றும் ?” என்று கேட்க விரும்பியிருந்தேன் என நான் ( அபூ பக்ர் ரலி அவர்களிடம் ) கூறினேன் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் நான் ( முன்பே ) கேட்டுவிட்டேன் “ என்று  கூறிவிட்டு “ என் பெரிய தந்தை ( அபூதாலிப் ) அவர்களிடம் நான் எதை எடுத்துக் கூறியபோது , அதை அவர்கள் ஏற்க மறுத்தாரோ , அந்தச் சொல்லை ( ஏகத்துவ உறுதிமொழியை ) நீங்கள் கூறுவதே அதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் “ என அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

தரம் : ளயீப் இருப்பினும் வேறு ஸஹீஹான அறிவிப்பு உள்ளதால் இது ஸஹீஹ் லி கைரிஹி என்ற தரத்தை அடையும்.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் முஸ்னது அபீய அலா (133) பதிவாகி உள்ளது அது பலவீனமான அறிவிப்பாளர் தொடரை கொண்டது ஆகும்.

38-حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، أَنَّ أَبَا بَكْرٍ خَطَبَ النَّاسَ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّهَا النَّاسُ إِنَّ النَّاسَ لَمْ يُعْطَوْا فِي الدُّنْيَا خَيْرًا مِنَ الْيَقِينِ وَالْمُعَافَاةِ، فَسَلُوهُمَا اللَّهَ عَزَّ وَجَلَّ»

حكم الحديث : صحيع لغيره وهدا إسناد ضعيف

38. ஹஸன் அல் பஸ் ரீ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :
அபூபக்ர் ( ரலி ) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் ; “ மக்களே ! இவ்வுலகில் ( ஏகத்துவ ) உறுதி , உடல் நலம் ஆகியவற்றைவிடச் சிறந்த வேறெதுவும் மக்களுக்கு வழங்கப்பட வில்லை ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் நீங்கள் அந்த இரண்டையும் கேளுங்கள் “ என அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறீனார்கள்.

தரம் : ளயீப் இருப்பினும் வேறு ஸஹீஹான அறிவிப்பு உள்ளதால் இது ஸஹீஹ் லி கைரிஹி என்ற தரத்தை அடையும்.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,34,44,46,49,66) திர்மிதீ ( 3558)

39-حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ وَحَدَّثَنِي حُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " لَمَّا أَرَادُوا أَنْ يَحْفِرُوا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ يَضْرَحُ كَحَفْرِ أَهْلِ مَكَّةَ، وَكَانَ أَبُو طَلْحَةَ زَيْدُ بْنُ سَهْلٍ يَحْفِرُ لِأَهْلِ الْمَدِينَةِ، فَكَانَ يَلْحَدُ، فَدَعَا الْعَبَّاسُ رَجُلَيْنِ، فَقَالَ لِأَحَدِهِمَا: اذْهَبْ إِلَى أَبِي عُبَيْدَةَ، وَلِلْآخَرِ: اذْهَبْ إِلَى أَبِي طَلْحَةَ، اللَّهُمَّ خِرْ [ص: 213] لِرَسُولِكَ. قَالَ فَوَجَدَ صَاحِبُ أَبِي طَلْحَةَ أَبَا طَلْحَةَ فَجَاءَ بِهِ، فَلَحَدَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "

حكم الحديث : 
إسناد ضعيف

39. இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல் ( அவர்கள் இறந்ததும் ) அவர்களுக்காக ( நபித்தோழர்கள் ) குழி வெட்ட விரும்பியபோது ( எப்படி குழி வெட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது ) அபூ உபைதா பில் அல் ஜர்ராஹ்( ரலி ) அவர்கள் மக்காவாசிகள் வெட்டுவதைப் போல் ( உட்குழியின்றி ) குழி வெட்டுபவராக இருந்தார். அபூதல்ஹா எனும் ஸைது பின் சஹ்ல் ( ரலி ) அவர்கள் மதீனாவாசிகளுக்கு உட்குழியுடன் குழி வெட்டுபவராயிருந்தார். அப்போது அப்பாஸ் ( ரலி ) அவர்கள் இருவரை அழைத்து , “ நீ அபூ உபைதாவிடம் செல் “ என்று ஒருவரிடமும் “ அபூதல்ஹாவிடம் நீ செல் “ என்று மற்றோருவரிடமும் கூறிவிட்டு “ இறைவா ! உன் தூதருக்காக ( அவர் எத்தகைய குழியில் அடக்க வேண்டுமென ) நீயே தேர்வு செய்” என்று கூறினார்கள் அப்போது அபூதல்ஹா ( ரலி ) அவர்களை அழைத்து வரச் சென்றவர் அபூதல்ஹாவைக் கண்டு அவரையே ( முதலில் ) அழைத்துவந்தார் அபூதல்ஹா ( ரலி ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்கு உட்குழியுடனேயே “ கப்று” ( அடக்கக் குழி ) வெட்டினார்கள்.

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 2357 ,2661 ) பதிவாகி உள்ளது அவைகளும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரை கொண்டே இடம்பெற்று உள்ளது.

40-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَخْبَرَنِي عُقْبَةُ بْنُ الْحَارِثِ، قَالَ: خَرَجْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ صَلاةِ الْعَصْرِ بَعْدَ وَفَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَيَالٍ، وَعَلِيٌّ عَلَيْهِ السَّلامُ يَمْشِي إِلَى جَنْبِهِ، فَمَرَّ بِحَسَنِ بْنِ عَلِيٍّ يَلْعَبُ مَعَ غِلْمَانٍ، فَاحْتَمَلَهُ عَلَى رَقَبَتِهِ وَهُوَ يَقُولُ: «وَا بِأَبِي شَبَهُ النَّبِيِّ لَيْسَ شَبِيهًا بِعَلِيِّ» ، قَالَ: وَعَلِيٌّ يَضْحَكُ

حكم الحديث : 
إسناده صحيح على شرط البخاري رجاله ثقات


40. உக்பா பின் அல்ஹாரிஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நபி ஸல் அவர்கள் இறந்த சில நாட்களுக்கு பின் நான் அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்களுடன் அஸ்ர் தொழுதுவிட்டு வந்து கொண்டிருந்தேன் அவர்களுக்குப் பக்கத்தில் அலீ ( ரலி ) அவர்களும் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.அப்போது அலீ ( ரலி ) அவர்களின் புதல்வர் ஹசன் ( ரலி ) அவர்கள் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( சிறுவர் ) ஹசனைத் தம் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டார்கள் பிறகு,

எந்தையுமக் கர்ப்பணம்! நீர்
   இறைத்தூதர்க் கொப்பாவீர் !

உந்தை அலிக் கொப்பில்லை
  உம்தோற்றம் ஹசனாரே!”

(கவிதையின் பொருள் : என் தந்தை உமக்கு அர்ப்பணம் ! நீர் ( உம் பாட்டனார் ) நபியின் சாயலில் உள்ளீர் உம் தந்தை அலீயின் சாயலில் இல்லை )

என்று ( கவி நடையில் ) கூறினார்கள் ( இதை கேட்டு ) அலீ ( ரலி ) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 3542,3750 ) முஸ்னது அபீய அலா (38) முஸ்னதுல் பஸ்ஸார் (53) தப்ரானியின் அல்முஅஜ்முல் கபீர் ( 2464 ) போன்ற நூல்களிலும் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment