Wednesday, May 16, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 12 [ 56 முதல் 60 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 12 [ 56 முதல் 60 ஹதீஸ் வரை ]



56-حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي زُرْعَةَ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا نَفَعَنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي مِنْهُ، وَإِذَا حَدَّثَنِي غَيْرُي اسْتَحْلَفْتُهُ، فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ، وَحَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَصَدَقَ أَبُو بَكْرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يُذْنِبُ ذَنْبًا فَيَتَوَضَّأُ فَيُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ فَيَسْتَغْفِرُ اللَّهَ إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ» ثُمَّ تَلا {وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ} [آل 
عمران: 135]

حكم الحديث : إسناده صحيع

56. அலீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து ( நேரடியாக ) எதையேனும் செவியுற்றால் அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய அளவுக்குப் பயனளிப்பான்.அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து வேறு யாரேனும் எனக்கு அறிவித்தால் அவரை நான் சத்தியம் செய்யச் சொல்வேன் அவர் சத்தியம் செய்தால் அதை உண்மை என நான் ஏற்பேன். அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் பின்வருமாறு அறிவித்தார்கள் அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் உண்மையே உரைத்தார்கள் .
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், “ இறை நம்பிக்கையாளர் ஒருவர் பாவம் ஒன்றைச் செய்துவிட்டு , அங்கத் தூய்மை ( உளூ) செய்து , அதையும் செம்மையாகச் செய்து , பிறகு இரண்டு “ ரக் அத்கள் “ தொழுது உயர்ந்தோன் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள்” என்றார்கள், பிறகு ,” யாரேனும் தீமையை செய்து, அல்லது தமக்குத் தாமே அ நீதயிழைத்துப் பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அவனை மன்னிப்பவனாகவும் , நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார் எனும் ( 4:110 ஆவது ) இறைவசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 2,47 ) அபூதாவூத் ( 1521) திர்மிதீ ( 406,3006)  இப்னுமாஜா ( 1395 )

57-حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ، فَقَالَ أَبُو بَكْرٍ: «يَا زَيْدُ بْنَ ثَابِتٍ، إنْك غُلامٌ شَابٌّ عَاقِلٌ لَا نَتَّهِمُكَ، قَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ»

حكم الحديث : إسناده صحيع رجاله ثقات


57. ஸைது பின் ஸாபித் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

யமாமா போருக்குச் சென்ற ( நபித்தோழர்களுள், குர் ஆனை மனன மிட்டிருந்த )வர்கள் கொல்லப்பட்ட கால கட்டத்தில் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் ஆளனுப்பி ( என்னை வரவழைத்து ) “ ஸைது பின் ஸாபித்தே ! நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் ( எந்த விதத்திலும் ) சந்தேகப்பட மாட்டோம் . நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்காக வேத வசனங்களை எழுதுபவராக இருந்தீர்கள் எனவே, நீங்கள் குர் ஆன் வசனங்களைக் கண்டறிந்து , ( ஒரே பிரதியில் ) ஒன்று திரட்டுங்கள் “ என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 76,21644 ) புஹாரி ( 1456,4679,4986,4989 )

58-حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ، وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمَا حِينَئِذٍ يَطْلُبَانِ أَرْضَهُ مِنْ فَدَكَ، وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ، فَقَالَ لَهُمَا أَبُو بَكْرٍ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ، وَإِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَالِ» وَإِنِّي وَاللَّهِ لَا أَدَعُ 
أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ فِيهِ إِلَّا صَنَعْتُهُ

حكم الحديث : 

إسناده صحيح على شرط الشيخين

58. ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் மகள் ஃபாத்திமா ( ரலி ) அவர்களும் அப்பாஸ் ( ரலி ) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்குரிய ஃப்தக் பகுதி நிலம், கைபர் பகுதியில் அவர்களுக்குக் கிடைத்த பங்கு ஆகியவற்றில் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கோரியபடி, அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் , இறைத்தூதர்களான எங்களுக்கு யாரும் வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம், தர்மம் செய்யப்பட்ட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் உண்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.( எனவே ) அல்லாஹ்வின் மீது ஆணையாக ! இ( ந்தச் சொத்துகள் விஷயத்)தில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எவ்வாறு செயல்பட்டதை நான் கண்டேனோ அதை நானும் செயல்படுத்தாமல் விட மாட்டேன் என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 9,25,55,60,78,79,425,1781,1782 ) புஹாரி ( 3092,3094 ) முஸ்லிம் (1757 ) இன்னும் பிற நூல்களில் இடம்பெற்று உள்ளது.

59-حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا نَافِعٌ يَعْنِي ابْنَ عُمَرَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قِيلَ لِأَبِي بَكْرٍ: يَا خَلِيفَةَ اللَّهِ فَقَالَ: «أَنَا خَلِيفَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا رَاضٍ بِهِ»

حكم الحديث : 
إسناد ضعيف

59. இப்னு அபீமுலைக்கா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ,” அல்லாஹ்வின் பிரதி நிதியே ! “ என்று அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள்,” நான் அல்லாஹ்வின் தூதருடைய ஆட்சிக்குத்தான் பிரதி நிதி ஆவேன் (அவ்வாறு என்னை அழைப்பதையே நான் விரும்புகிறேன்) என்று கூறினார்கள்.

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 64 ) இப்னு அபீஷைபா (38203 ) பதிவாகி உள்ளது

60-حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ فَاطِمَةَ قَالَتْ لِأَبِي بَكْرٍ: مَنْ يَرِثُكَ إِذَا مِتَّ؟ قَالَ: وَلَدِي وَأَهْلِي. قَالَتْ: فَمَا لَنَا لَا نَرِثُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّبِيَّ لَا يُورَثُ» ، وَلَكِنِّي أَعُولُ مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُولُ وَأُنْفِقُ عَلَى مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ

حكم الحديث : صحيع لغيره

60. அபூ சலமா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் ,” நீங்கள் இறந்துவிட்டால் , உங்களுடைய சொத்துக்கு யார் வாரிசாவார்கள் ? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” என் பிள்ளைகளும் என் குடும்பத்தாரும் தான் என்று விடையளித்தார்கள்.’ அவ்வாறாயின் நபி ஸல் அவர்களின் சொத்துகளுக்கு நாங்கள் வாரிசாகாததற்கு என்ன காரணம் ? என்று ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,’ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,’ (இறைத்தூதர்களான) எங்களுடைய சொத்துக்கு யாரும் வாரிசாக முடியாது என்று கூறினார்கள். என்று கூறிவிட்டு ,” எனினும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் யாரையெல்லாம் கவனித்துவந்தார்களோ அவர்களை நானும் கவனிப்பேன் . யாருக்கெல்லாம் அவர்கள் செலவுத் தொகை கொடுத்துவந்தார்களோ அவர்களுக்கு நானும் செலவுத் தொகை கொடுப்பேன் என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி ( புறச்சான்றுகளால் ஆதாரபூர்வமானது )

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் 9 9,25,55,58,78,79,425,1781,1782 ) புஹாரி (3092,3094) முஸ்லிம் (1757)

No comments:

Post a Comment